ஐன்ஸ்டீன் கல்விக் குழுமம் மாணவர்களிடையே வாசிப்பு மற்றும் எழுத்து பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் உள்ள திருவள்ளுவர் நூலகத்தில் “தேசிய நூலக தின விழா” சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

 

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொடர் வாசிப்பு, கட்டுரைப் போட்டி மற்றும் சிறுகதை எழுதுதல் என மூன்று போட்டிகள் நடத்தப்பட்டன. சுமார் 135+ மாணவர்கள் 25+ பேராசிரியர்கள் ஆர்வத்துடன் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து இன்று நூலகத்திற்கு வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்குப் பல மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்று வாசித்தது, எழுதியது உற்சாகமும் நம்பிக்கையும் அளித்தது.